மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சோதனை

14
Jan
2019

பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த போது சேலம் ஆட்சியர் ரோகிணி இத்தகவலைத் தெரிவித்தார். போட்டி ஏற்பாட்டாளர்கள் நீதிமன்ற விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். இதற்கிடையே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. படம்: தகவல் ஊடகம்