பொங்கல் பரிசு: எம்.எல்.ஏ., வழங்கல்Advertisement

பொங்கல் பரிசு: எம்.எல்.ஏ., வழங்கல்
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட திருமூலஸ்தானம் கூட்டுறவு நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழாவிற்கு, குப்பங்குழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வாசு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சங்க செயலர் முத்தையன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார்.முருகுமாறன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கி பேசினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்ஜிஆர் தாசன், முன்னாள் துணைத் தலைவர் வாசு முருகையன், நிர்வாகிகள் வசந்தகுமார், அசோகன், ஜான்போஸ்கோ, அன்பழகன், பாண்டியன், தமிழ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisementவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!