பொங்கல் சலுகை: இன்று முதல் ஆவின் நெய்க்கு தள்ளுபடி

aavin announced pongal offer for ghee

Highlights

  • பொங்கலை முன்னிட்டு 18ஆம் தேதி வரை ஆவின் நெய் வாங்கினால் சலுகை
  • 3 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலைக் குறைப்பு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நெய் வாங்குபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி அளிப்பதாக ஆவின் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சலுகை பற்றி ஆவின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 5 நாட்களுக்கு ஆவின் நெய் சலுகை விலையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை வரும் 14ஆம் தேதி (இன்று) முதல் 18ஆம் தேதி வரை கிடைக்கும். இந்த நாட்களில் ஆவின் கடைகளில் 1 லிட்டர் நெய் 20 ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். அரை லிட்டர் நெய்க்கு 10 ரூபாய் கழிவு. 200 மி.லிட்டருக்கு 5 ரூபாய் குறைவான விலை. 100 மி.லிட்டருக்கு 3 குறைப்பு.

இன்னும் அதிக அளவு வாங்கும்போது அதிக சலுகை கிடைக்கும். அதாவது 5 லிட்டருக்கு 100 ரூபாயும், 15 லிட்டர் நெய்க்கு 300 ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படும்.

பொங்கல் பண்டியை கொண்டாடும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தரமான ஆவின் நெய் தள்ளுபடி விலையில் அளிக்கப்படுகிறது எனவும் அதனை பொதுமக்கள் வாங்கி மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வாழ்த்துவதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.