சர்காரை புறந்தள்ளி பரிசுப் பொருட்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

சர்காரை புறந்தள்ளி பரிசுப் பொருட்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

பரிசு பொருள் வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்.


news18

Updated: January 14, 2019, 2:43 PM IST

சர்கார் படம் வெளியானபோது இலவசங்களை தீயிட்டு கொளுத்திய விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் சர்கார். இந்தப் படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து படம் மறுதணிக்கை செய்யப்பட்டது. அப்போது இலவசங்களை தீயிட்டு கொளுத்தும் 5 நொடி காட்சிகள் நீக்கப்பட்டன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள் அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி அதை வீடியோவாக சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். அதேபோல் இலவச பொருட்களுடன் கூடிய கேக்கை வெட்டி படத்துக்கான வெற்றியை கொண்டாடியது படக்குழு.

இந்த நிலையில் சர்கார் படம் வெளியானபோது இலவச பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள் தற்போது பொங்கல் பரிசுப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதற்கான புகைப்படங்களை விஜய் மக்கள் இயக்க தலைமை பொறுப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading…

விஜய் சர்கார்… அரசியல் – வீடியோFirst published: January 14, 2019