ஏரிஸ் பெண்கள் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழாAdvertisement

ஏரிஸ் பெண்கள் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
வடலுார்: வடலுார் அடுத்த கருங்குழி ஏரிஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவை ஏரிஸ் கல்லுாரித் தலைவர் அறிவழகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் கல்லுாரி துறை வாரியாக மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிப்பட்டனர். மாணவிகளின் பரதம், கும்மி, காவடி, வில்லுப்பாட்டு, கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புறப்பாடல், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்களுக்கு இசைநாற்காலி, மாணவிகளுக்கு கபடிப்போட்டி, கோலப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.கடலுார்அரசு காது கேளாதோர் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைமை ஆசிரியை மரிய பாஸ்கர் தலைமை தாங்கினார். விழாவில், ஆசிரியைகள் ஏஞ்சலின் வசந்தி, பத்மாவதி, திலகவதி, ஜான்சிராணி, ஆரோக்கியமேரி உட்பட பலர் பங்கேற்றனர். பொங்கல் படையலிட்டு மாணவ, மாணவியருக்கு உணவு பரிமாறப்பட்டது.

Advertisementவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!