அமீரக ஆட்சியாளருடன் ராகுல் காந்தி சந்திப்பு – முக்கிய …

Sharjah: 

ஐக்கிய அரபு அமீரசத்தில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அந்நாட்டின் ஆட்சியாளர் சுல்தான் பின் முகம்மது அல் காசிமியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா – அமீரகம் உறவு குறித்தும், பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ” சுல்தான் முகம்மது அல் காசிமியை சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது உற்சாகம், என்னை சந்திப்பதற்கு அவர் காட்டிய ஆர்வம் உள்ளிட்டவை எனக்கு ஊக்கம் அளித்தன. காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்களுக்கும், உள்ளூர் அமைப்பினருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த வெள்ளியன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூமை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளின் உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனறு மக்தூம் ராகுலிடம் உறுதி அளித்தார்.

அமீரக பயணத்தின்போது தொழில் அதிபர்கள், வல்லுனர்கள், பஞ்சாப் மாநில மக்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
 

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.