ஆலன் பார்டர் காலத்துக்கு மாறும் ஆஸ்திரேலிய சீருடை!


ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1986களில் ஆலன் பார்டர் தலைமையிலான அணி அணிந்திருந்த வண்ணத்தில் சீருடை அணிந்து ஆடவுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள பேட்டியில் ”அனைத்து வீரர்களும், இந்த சீருடையை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டோம். இது அழகாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த சீருடை அணியப்பட்டபோது பீட்டர் சிடிலுக்கு ஒரு வயது என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த சீருடையை பெவிலியனில் கண்டதும் அவ்வளவு ஆச்சர்யப்பட்டதாக கூறினார். மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா இந்த சீருடையுடனேயே ஆடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டர் சிடில் கடைசியாக 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளில் ஆடினார். அதன்பின் 8 ஆண்டுகள் அவர் ஒருநாள் அணியில் இடம்பெறவே இல்லை. 

17 போட்டிகளில் ஆடியுள்ள சிடில், மீண்டும் அணிக்கு திரும்பியதற்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அவரது எக்கானமி 4.64 என சிக்கனமாகவே இருந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை துவங்குகிறது.