ஹாக்கி உலகக்கோப்பை 2018 : கனடாவை வீழ்த்துமா இந்தியா …

அதில் இந்தியா முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் பெல்ஜியம் அணியோடு சமன் செய்தது. எனினும், கோல் வித்தியாச அடிப்படையில், தான் இடம் பெற்றுள்ள குரூப் “சி”யில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா.

கனடா அணி பெல்ஜியம் அணியிடம் 1-2 என தோல்வி அடைந்தது. தென்னாபிரிக்கா அணியோடு போராடி 1-1 என சமன் செய்தது. கனடா தற்போது தடுமாறி வரும் நிலையில், இந்தியா, கனடாவை வீழ்த்த அதிக வாய்ப்புள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கனடா அணியுடன் 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 3 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா செய்துள்ளது. இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் எளிதாக காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

தற்போது இந்தியாவின் ஒரே பிரச்சனை, கடைசி ஐந்து நிமிடங்களில் எதிரணியை கோல் அடிக்க விடுவது தான். இது இந்த ஆண்டு முழுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. அதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியா – கனடா ஆடும் போட்டி டிசம்பர் 8 அன்று மாலை 7 மணிக்கு துவங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் காணலாம்.