கடைசிப் போட்டியில் சதமடித்து ஓய்வு பெற்ற கம்பீர்!

கடைசிப் போட்டியில் சதமடித்து ஓய்வு பெற்ற கம்பீர்!

ரஞ்சிப் போட்டியில் சதமடித்த கம்பீர் (PTI)


Web Desk | news18

Updated: December 8, 2018, 2:04 PM IST

சொந்த ஊரான டெல்லியில் நடந்த தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் கவுதம் கம்பீர் சதம் அடித்து ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்த கவுதம் கம்பீர் (37), அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகச் அண்மையில் அறிவித்தார். ரஞ்சி டிராபி தொடரில் குரூப் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி மற்றும் ஆந்திரா இடையிலான போட்டி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

Loading…

முதலில் பேட் செய்த ஆந்திரா அணி 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கவுதம் கம்பீர் சதமடித்தார். முதல் தர கிரிக்கெட்டில் கம்பீர் அடித்த 43-வது சதம் இதுவாகும். இவர், 185 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டெல்லி வீரரான கவுதம் கம்பீர் தனது சொந்த ஊரில் சதத்துடன் தனது கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்து ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தார்.

Gautam Gambhir

டெஸ்டில் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கம்பீர் (BCCI)

சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கம்பீர், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 சதம், 22 அரைசதங்களுடன் 4199 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் 11 சதம், 34 அரை சதங்களுடன் மொத்தம் 5238 ரன்களைக் குவித்தார்.

Gambhir

போட்டிக்கு முன் மைதானத்தில் கம்பீர் (BCCI)

குறிப்பாக, 2011-ல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். 2007 டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Watch…

imageFirst published: December 8, 2018