விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்தது… தனது ஸ்டைலுக்கு திரும்பிய …

விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்தது... தனது ஸ்டைலுக்கு திரும்பிய அஜித்

விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


Web Desk | news18

Updated: November 10, 2018, 1:04 PM IST

அஜித் நடித்து வந்த ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இயக்குநர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, தெலுங்கு நடிகர் ரவி அவானா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு புனே சென்றிருந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்திருப்பதாக படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் அஜித் தனது இயல்பான தோற்றத்தில் தோன்றியுள்ளார். முன்னதாக படத்தில் இரு தோற்றங்களில் நடிக்க அஜித் இளமையான கருப்பு நிற முடியுடன் தோன்றியிருந்தார்.

இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் `தூக்கு துரை’ என்றும் தகவல்கள் வெளியாகின.

மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிட்ட படக்குழுவினர் சமீபத்தில் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். பொங்கலுக்கு விஸ்வாசம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.First published: November 10, 2018