விடுவிப்பு!
Advertisement
விடுவிப்பு!விடுவிப்பு!

நக்சலைட்களின் பிடியில் சிக்கி தவித்த சத்தீஸ்கரை, முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., அரசு விடுவித்துள்ளது. தற்போது, அதிகளவு சிமென்ட் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக, சத்தீஸ்கர் உருவெடுத்துள்ளது.

அமித் ஷா தலைவர், பா.ஜ.,
கண்துடைப்பு!
மஹாராஷ்டிர மாநிலத்தில், பெண் புலி, ‘ஆவ்னி’ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரிப்பதற்காக, அரசு சார்பில், வெறும் கண்துடைப்புக்காகவே, கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதை கலைத்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கமிட்டி அமைக்க வேண்டும்.

உத்தவ் தாக்கரே
தலைவர், சிவசேனா
விளையாடுகிறது!
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில், சொந்த நலனுக்காக, காங்கிரஸ் கட்சி விளையாடி வருகிறது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், அரசியல் ஆதாயத்திற்காக, நக்சலைட்களை, அந்த கட்சி ஆதரிக்கிறது. ஆனால், நாட்டின் பாதுகாப்பே, பா.ஜ.,வுக்கு முக்கியம்.

யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!