இதே நாளில் அன்று
Advertisementநவம்பர் 11, 1888
மவுலானா அபுல் கலாம் ஆசாத்: சவுதி அரேபியாவில் உள்ள, மெக்காவில், மவுலானா கைருதீன் — அலியா தம்பதிக்கு மகனாக, 1888, நவ., 11ல் பிறந்தார்.அவர் இந்தியராக பிறக்கவில்லை என்றாலும், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்; சுதந்திர இந்தியாவின், முதல் கல்வி அமைச்சராக, 11 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது இயற்பெயர், மவுலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது; விடுதலை என்ற அர்த்தம் கொண்ட, ‘ஆசாத்’ என்ற சொல்லை, தன் பெயரோடு இணைத்துக் கொண்டார். அவரது குடும்பம், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் குடியேறிய பின், ‘லிசான் -உல் -சித்திக்’ என்ற இதழை துவக்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கெடுத்தார். இவரது பிறந்த நாள், தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1958, பிப்., 22ல் காலமானார். மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம் இன்று!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!