ரூ.27 கோடிக்கு ஏலம் போன சக்கர நாற்காலி

சென்னை, நவ.10: மறைந்த பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய தானியங்கி சக்கர நாற்காலி ஏலம் விடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியும், இயற்பியல் ஆய்வாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 21வது வயதில் தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் உடல் உறுப்புகள் செயலிழந்தன.

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலியில் வலம் வந்த அவர், தான் பேச விரும்பியதை கணினி மூலம் கூறினார்.கடந்த மார்ச் மாதம் தனது 76வது வயதில் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானதை அடுத்து, அவர் பயன்படுத்திய தானியங்கி சக்கர நாற்காலி லண்டனில் ஏலம் விடப்பட்டது. அதை, இந்திய மதிப்பில் 27 கோடி ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்தார். இந்தத் தொகை எதிர்பார்த்தை விட இரு மடங்கு அதிகம் என கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

image  image  image  image  image  image